தன்னார்வலர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கோரிக்கை

தன்னார்வலர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கோரிக்கை
X

தமிழகம் முழுவதும் கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 970 உடல்களை தமிழகத்தில் அடக்கம் செய்துள்ளதாகவும், நெல்லையில் மட்டும் 150 உடல்களை அடக்கம் செய்துள்ளதாக எஸ்டிபிஐ அமைப்பு அறிவித்துள்ளது..

உடல்களை அடக்கம் செய்த தன்னார்வலர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவத் தொடங்கியதிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவரும் பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர் அவர்கள் கலந்துகொண்டு தன்னார்வலர்கள் உரிய ஆலோசனை வழங்கியதோடு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் இரண்டாம் அலையில் இதுவரை 5386, தமிழகத்தில் 970, பாதிக்கப்பட்டு உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்துள்ளதாகவும் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 150 உடல்களை அடக்கம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தமிழகம் முழுவதும் கோவிட் உதவி மையங்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்படுத்தி வருவதாகவும் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 5 பேரிடர் உதவி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் சென்னையில் 60 படுக்கைகளுடன் கூடிய கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டு 24 மணிநேர மருத்துவ கண்காணிப்புடன் நடைபெற்று வருவதாகவும், இதில் தொற்று பாதித்த பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் முஹம்மது அலி, மாவட்ட செயலாளர் இம்ரான் அலி, எஸ்டிபிஐ கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ. கனி, புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்