முதன் முதலில் மின்சாரம் அதிக தூரம் எடுத்துச் செல்லப்பட்ட நாள்⚡இன்று

முதன் முதலில் மின்சாரம் அதிக தூரம் எடுத்துச் செல்லப்பட்ட நாள்⚡இன்று
X

இன்று ஜூன் 3, 1889- முதன்முதலில் மின்சாரம் அதிக தூரம் எடுத்துச்செல்லப்பட்ட நாள்⚡ .

1831-ல் மைக்கேல் ஃபாரடே மின்சாரத்தைக் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த விதிகளின்படிதான் இன்றும் மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.உற்பத்தியான மின்சாரத்தைப் பல இடங்களுக்கு எடுத்துச்சென்று விநியோகம் செய்வது தனி அறிவியல். மின்விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவில் ஒரு தெருவில் தெருவிளக்குகளை எரிய வைத்தும் காட்டினார்.

பிறகு நீண்ட தூரம் மின்சாரம் எடுத்துச் செல்லப்பட்டது சார்லஸ் பார்சன் கண்டுபிடித்த டர்போ ஜெனரேடர் மூலம் அதிக அளவு மின் உற்பத்தி செய்ய முடிந்தது அதனை வெகு தொலைவு வரை கொண்டு சென்று பயனாளிகளுக்கு வினியோகம் செய்யவும் முடிந்தது. . 1889-ம் ஆண்டு இதே நாளில்தான்..

அமெரிக் காவின் வில்லாமிட்டி அருவி நீரைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட புனல் மின்சாரத்தை கம்பிகள் மூலம் 23 கி.மீ. தூரத்தில் உள்ள ஓரகன் என்னுமிடத்தில் போர்ட்லாண்ட் பகுதிக்குக் கொண்டு சென்று அங்கிருந்த தெருவிளக்குகள் எரியவைக்கப்பட்டன

Next Story
புதுமண தம்பதிகளே..! தேனும் எள்ளும்...! நம்பவே முடியாத அளவுக்கு அற்புதங்கள்..! என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?