சற்று முன் வந்த பிளாஷ் பேக் ரிப்போர்ட் அது 2006 ம் ஆண்டு மலரும் நினைவுகள்.
சற்று முன் வந்த பிளாஷ் பேக் ரிப்போர்ட்...
அது 2006. ம் ஆண்டு -மலரும் நினைவுகள்..
ஹவுசிங் போர்டு ஆபீஸ்ல திடீர்னு பரபரப்பு. நோட்டீஸ் போர்டு முன்னால கூட்டம். கார்ட்டூன் மாதிரி யாரோ படம் வரஞ்சு அதுல பின் பண்ணி இருந்தாங்க. 'ஆமா, சரியாதான இருக்கு..' 'யாரா இருந்தா என்னப்பா, அதுல எதாச்சும் தப்பு இருக்கா, சொல்லு..' னு பேசிகிட்டாங்க. கோபாலபுரத்துக்கு தகவல் போயிருச்சு. யாரோ அதிகாரி மாடில இருந்து தடதடனு எறங்கி வந்தார். நோட்டீஸ் போர்டு பாக்ச திறந்தார். கார்ட்டூன் பேப்பர எடுத்தார். சுருட்டி எடுத்துட்டு கார்ல பறந்தார்.
கொஞ்ச நேரத்துல திமுக யூனியன் தலைவருக்கு போன். சீயெம் கூப்டதா சொன்னாங்க. போனார்.கைலியோட இருந்த கருணாநிதி கைல அந்த கார்ட்டூன்.'என்னய்யா இது? ஆட்சிக்கு வந்து ஆறு மாசம் ஆகல. புதுசா பிரச்ன கெளப்புறீங்களா?' 'இல்ல தலைவரே.. அவங்க கவர்மென்ட்ல போனச நிறுத்திட்டாங்க. நம்ம ஆட்சில திரும்ப கிடைக்கும்னு இருந்தாங்க.. இல்லைனு தெரிஞ்சதும் அப்செட் ஆயிட்டாங்க..' 'கார்ட்டூன பாருய்யா.. ஆவின், போலீஸ் குடியிருப்புகள் முன்னால குழந்தைக பட்டாசு வெடிச்சு கொண்டாடுது. வாரிய குழந்தைகள் ஏக்கமா நிக்கிது. ஏன் போடல போனஸ்?'
'நிதி நிலைமை சரியில்லைனு சொல்றாங்க, தலைவரே..' 'நிதியே நாந்தானய்யா.. நல்லாதான இருக்கேன். ராமசாமிய வரச்சொல்லு..'
சீயெம் செகரட்டரி ராமசாமி ஐஏஎஸ் வந்தார். 'வீட்டு வசதி வாரிய ஊழியர்களுக்கும் போனஸ் போடணும். என்ன செய்யலாம், சொல்லுங்க..'அவர் யோசனையில் மூழ்கினதும், அவர பாதி சீயெம்ம பாதி பாத்து ஐடியா சொல்றார் தொழிற்சங்க தலைவர். 'வாரியத்துல நிதி இல்லைனாலும் சொத்து எக்கசக்கம் இருக்கு. அத வச்சு ஒரு நிதி உண்டாக்கலாம். அதுல வர்ற வருமானத்த பயன்படுத்தலாம்னு தோணுச்சு..' நீங்க என்ன நினைக்றீங்க, ராமசாமி? பூச்சி சொல்றது சரியா வருமா..' 'செய்யலாம்ங்க. இப்போதைக்கு அட்வான்ஸ் மாதிரி குடுத்துட்டு பிறகு ரெக்கவரி பண்ணிக்கலாம்.''சரி, உடனே செய்ங்க' புறப்படும்போது, 'இந்தாயா, வரஞ்சவர்ட்ட திருப்பி குடுத்துரு. அவரு நோக்கம் பூர்த்தி ஆயாச்சுல்ல..'
புன்னகையோட சொன்ன தலைவருக்கு கை கூப்பி தேங்ஸ் சொல்லிட்டு கெளம்புனாரு பூச்சி முருகன். வாரிய ஊழியர்கள் குடியிருப்புலயும் குதூகலமா தீபாவளி கொண்டாடுச்சு குழந்தைங்க.
✍️கதிர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu