ஜூன் 4ஆம் தேதி பிளஸ்2 பொதுத் தேர்வு குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும்-தகவல்

ஜூன் 4ஆம் தேதி பிளஸ்2 பொதுத் தேர்வு குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும்-தகவல்
X
பிளஸ் 2 தேர்வு-புதுசாக உருவாக்கி அறிவிச்சிருக்கும் ஐடி-யையும் அரசின் போக்கையும் பல டெக்னிஷியங்க கண்டிக்கிறாய்ங்க..

ஜி மெயிலில் புதுசாக உருவாக்கி அறிவிச்சிருக்கும் ஐடி -யையும் அரசின் போக்கையும் பல டெக்னிஷியங்க கண்டிக்கிறாய்ங்க

பிளஸ் 2 தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆலோசனைகளை அளிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவிச்சு ஒரு ஈ மெயில் அட்ரஸ் கொடுத்துருக்காய்ங்க..

(14417 என்கிற உதவி எண் & tnschoolsedu21@gmail.com என்கிற இணையதள முகவரியிலும் மாணவர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து கருத்துக்களை பதிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு)

அதுக்காக ஜி மெயிலில் புதுசாக உருவாக்கி அறிவிச்சிருக்கும் ஐடி -யையும் அரசின் போக்கையும் பல டெக்னிஷியங்க கண்டிக்கிறாய்ங்க.. அதாவது இது போன்ற மாநில வாரியான சர்ச்சைக்குரிய விவகாரங்களுக்கு அரசு கையாளும் டொமைனில் உள்ள மெயிலைதான் அறிவிச்சிருக்க வேண்டும்.. இப்ப இப்படி பண்ணியது போல் ஆளாளுக்கு ஏதேதோ காரணத்துக்காக யார் யாரோ ஜி மெயில் ஓப்பன் பண்ணி சோஷியல் மீடியாவில் பரப்பி செய்திகளை கறக்கும் போக்கு நிலவலாம் என்கிறார்கள்.

இதனிடையே இந்த எக்ஸாம் வைக்கலாம்? என்பது குறித்து கல்வியாளரும் எனது (மைக்கேல்) நண்பருமான ரமேஷ் பிரபாவிடம் பேசியபோது, ''தேர்வுகளை ரத்து செய்துவிட்டு ஏதேனும் ஒரு அடிப்படையில் மதிப்பெண்களை வழங்கும் போது அது சரியாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான். அதனால் காலம் கடந்தாலும் முறைப்படுத்தப்பட்ட, எளிமைப்படுத்தப்பட்ட, இன்றைய ஆன்லைன் கல்விக்கு ஏற்றாற்போல் தேர்வு நடத்தி, அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் உயர் கல்விக்கான சேர்க்கையை நடத்தினால் சரியாக இருக்கும்'' அப்ப்டீன்னு சொல்றார். மேலும் பலர் காலேஜ் அட்மிசனுக்கு எண்ட்ரன்ஸ் எக்ஸாம் வைக்க திட்டமிடும் மத்திய அரசின் போக்கில் தமிழக அரசு பயணிக்கக் கூடாது என்று எச்சரிக்கிறார்கள்..

அப்டேட்..நவ்..

இந்தச் சூழலில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

அந்த அறிக்கையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நாளை (ஜூன் 2) இணைய வழியிலான கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும். கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் கூட்டம் குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் உள்ளூர்ப் பகுதிகளில் உள்ள பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டு அறிக்கை தயாரிக்க வேண்டும். இந்த அறிக்கையை ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நாளை (ஜூன் 3) மாலைக்குள் அறிக்கையைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகளின் அடிப்படையில் இது தொடர்பாக முதல்வருடன் நாளை மாலையே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். அதன்பிறகு நாளை மாலை அல்லது ஜூன் 4ஆம் தேதி காலை பொதுத் தேர்வு குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!