கவிக்கோ அப்துல் ரகுமான் காலமான நாளின்று😢

கவிக்கோ அப்துல் ரகுமான்
கவிக்கோ அப்துல் ரகுமான் காலமான நாளின்று😢
சென்ற நூற்றாண்டின் இறுதிக் காலப் பகுதியில் அன்றைய இளைஞர்களைத் தன் மொழியால் வளைத்துப் போட்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள். அவருடைய கவிதைகள், வார இதழ்களில் அவர் எழுதிய உரைக் காவியங்கள் ஆகியவற்றை காத்திருந்து வாங்கி வாசித்த இளைஞர் பட்டாளம் தமிழகத்தில் ஏராளமுண்டு. நமக்குத் தெரிந்த செய்தியானாலும் தெரியாத செய்தியானாலும் ஒன்றை இத்தனை அழகாகச் சொல்ல இயலுமா, இப்படியும் அதைச் சொல்ல முடியுமா என வியக்க வைத்தவர் அவர்.
சாம்பிளுக்கு அவர் படைப்பு ஒன்று இதோ:
தொலைந்து போனவர்கள்
விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்ல
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய
'நான்' என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
'ஏன்'? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu