கொரோனா சிகிச்சை மையங்களை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
கொரோனா சிகிச்சை மையங்களை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு கொரோனா சிகிச்சை மையங்களை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள புனித அந்தோணியார் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 140 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் மற்றும் வள்ளியூரில் உள்ள யுனிவர்சல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 180 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தலைவர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரும் தலைமைச் செயலகத்திலிருந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்டேட்..
இதன்மூலம் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட வள்ளியூர் மற்றும் ராதாபுரம் வட்டார மக்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி மற்றும் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலை மாறி இனி அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சிகிச்சை பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இப்புதிய கொரோனாசிகிச்சை மையங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் அருகிலுள்ள திசையன்விளை மற்றும் வடக்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆகிய வசதிகளுடன் கூடிய 668 படுக்கைகளுடன், வசதிகள் அற்ற ஆயிரத்து 587 படுக்கைகள், மற்றும் 186 அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள், என மொத்தம் 2441 படுக்கை வசதிகள், அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 8 கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் 300 ஆக்ஸிஜன் படுக்கைகள், 231 ஆக்சிஜன் வசதிகளற்ற படுக்கைகள், மற்றும் 79 அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள், என மொத்தம் 110 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலியிலிருந்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு ஆகியோரும், தலைமைச் செயலகத்திலிருந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu