புளியங்குடி அருகே சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

புளியங்குடி அருகே சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
X

புளியங்குடி அருகே சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கள்ளச் சாராயம் மற்றும் எரிசாராயம் ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் புளியங்குடி நவசாலையில் இருந்து மலையடிக்குறிச்சி செல்லும் பகுதியில் சட்டவிரோதமாக மணல் திருடுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த சிந்தாமணியை சேர்ந்த மாரியப்பன் (30) மற்றும் சக்திவேல் (29) ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் JCB இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story