தென்காசியில் கொரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் சிவகிரியில் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு சித்த மருத்துவம் மற்றும் கோமியோபதி துறை சார்பில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் சமீரன், நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இன்று முதல் சித்த மருத்துவ கோவிட் 19-சிறப்பு சிகிச்சை மையம் 75 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்து வழிமுறைகளின் படி தொடங்கப்பட்டுள்ளது.
இம் முகாமில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை முறைகளான உள் மருந்துகள், வெளிப்புற சிகிச்சைகள், சிறப்பு சித்த யோக முச்சுப்பயிற்சிகள், தியானம், பிராணவாயு அளவை அதிகரிக்கும் பிரத்யேகமான நுரையீரலை பலப்படுத்தும் ஆசனங்கள், வர்ம முறைகள் மன உலைச்சலை போக்கும் (Relaxation) முறைகள், Councelling மற்றும் கபசுர குடிநீர் நிலவேம்பு குடிநீர், நொச்சிக்குடிநீர், ஒமக்குடிநீர், பிராணவாயு அதிமுள்ள பொருட்களான கிராம்பு, இலங்கப்பட்டை, மஞ்சள் சிரகம், இஞ்சி கலந்த முலிகைதேநீர், அயிங்காயம் கலந்த நீர், நீராவிப்பிடித்தல், ஒமப்பொட்டணம், மஞ்சள் திரி நுகர்தல் போன்ற சிறப்பு சிகிச்சைகள், முலிகை சார்ந்த உணவுகள் வழங்கப்படும்.
மேலும், நோய்த்தொற்றிலிருந்து குணமாகி நலமுடன் விட்டிற்குச் செல்பவர்களுக்கு உடல் வலிமைக்காக தமிழக அரசின் ஆரோக்கிய பெட்டகமான சித்த மருந்துகள் ஒரு மாத காலத்திற்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu