சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் கூடினால் அதுக்கு பேரு அரசு விழாவாம்..

சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் கூடினால் அதுக்கு பேரு அரசு விழாவாம்..
X

சங்கரன்கோயிலில் நடைபெற்ற அரசு விழா.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அரசு விழா நடைபெற்றது.பொதுமக்கள் அச்சம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, சதன் திருமலைகுமார் அரசு அதிகாரிகள், கட்சிப் பிரதிநிதிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

குறுகிய இடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இயலாத சூழ்நிலை உருவானது. கடந்த சில நாட்களாக மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் இது போன்ற சூழ்நிலை இருப்பதாகவும் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் சாலையில் சென்றாலோ, அதிகமாக கூடினாலோ அபராதம், வழக்கு, கொரோனா பரிசோதனை, என்று நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரிகள் தற்போது எங்கு சென்றார்கள்? இது போன்ற நிகழ்ச்சிகளால் கொரோனா நோய் தொற்று பரவாதா? என்று பாமர மக்கள் தங்களுக்குள் புலம்பி சென்றனர்.

Next Story