திருப்பத்தூர் வர்த்தக சங்கத்தினர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 2,50,000 அமைச்சரிடம் வழங்கினர்

திருப்பத்தூர் வர்த்தக சங்கத்தினர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 2,50,000 அமைச்சரிடம் வழங்கினர்
X

திருப்பத்தூர் வர்த்தக சங்கத்தினர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 2,50,000 அமைச்சரிடம் வழங்கினர்

சிவகங்கை மாவட்டம் திருப்த்தூர் அழகப்பா பாக்கியம் திருமண மஹாலில் மாநில வர்த்தக சங்கத் துணைத்தலைவர் எஸ்.ஆர்.சி.லட்சுமணன் தலைமையில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ரூபாய் ஓரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், நகைக்கடை உரிமையாளர் சங்கத்தின் சார்பாக 40,000 ரூபாயும், எஸ்.ஆர்.சி.ஆர்.பாத்திரக்கடை மற்றும் சந்தனமாரி பர்னிச்சர் கடையின் சார்பாக 50,000 ரூபாயும், திருப்புத்தூர் கே.ஆர்.பிராய்லர்ஸ் கடையின் சார்பாக 10000 ரூபாயும், தமிழக முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வர்த்தக சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!