ராஜபாளையம் பகுதியில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்த 300 வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை. காவல்துறை நடவடிக்கை:

ராஜபாளையம் பகுதியில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்த 300 வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை. காவல்துறை நடவடிக்கை:
X

ராஜபாளையம் பகுதியில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்த 300 வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை. காவல்துறை நடவடிக்கை:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கொரோணா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு விதித்துள்ள நிலையில் காவல்துறை கடந்த வாரம் முழுவதும் தேவையில்லாமல் வீதியில் சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில், காவல்துறை எவ்வளவுதான் எச்சரிக்கை விடுத்தாலும் அதையும் அலட்சியப்படுத்தி நோய்த்தொற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஏதாவது ஒரு காரணங்களைக் கூறி வெளியில் சுற்றித் திரியும் நபர்களை ராஜபாளையம் துணைக் கண்காணிப்பாளர் நாக சங்கர் உத்தரவின்பேரில், காவல்துறையினர் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு அந்த வழியில் வரக்கூடிய வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள் உதவியுடன் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 300க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு கொரோணா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பொதுமக்கள் காவல்துறை மற்றும் தமிழக அரசு அறிவித்துள்ள உத்தரவை மீறாமல் தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம் என காவல்துறை வெளியில் சுற்றித் திரியும் நபர்களிடம் அன்பான வேண்டுகோளை கூறினர். இதையும் மீறி வெளியே சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்து அனுப்பினார்.

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!