ஓடோடி வந்து உதவிடும் மனசு கொண்ட பூச்சியண்ணன்-னுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ஓடோடி வந்து உதவிடும் மனசு கொண்ட பூச்சியண்ணன்-னுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
X

பூச்சியண்ணன்

ஹேப்பி பர்த் டே அண்ணன் @+91 94444 22222 💐

நேர்படப் பேசுபவர்..உயிர்களை நேசிப்பவர்..மனிதம் வளர்ப்பவர்..அன்பை அடிக்கடி பகிர்பவர்..கலையுலகின் நிரந்தர அமைச்சர்

தி.மு.க-வில் வீட்டுவசதி வாரிய தொழிற்சங்கத்தில் இருந்தவர் / இருப்பவர்,திமுக இலக்கிய அணியிலும் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்,மாபெரும் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் .....

ஒரு பிரச்னை அல்லது தப்பு நடந்த இடத்தில் இந்த கொரொனா வைரஸ் மாதிரி கண்ணுக்குத் தெரியாத பூச்சி மாதிரி நுழைந்து நியாயத்தை கண்டு பிடித்து உண்மையின் பக்கம் குரல் கொடுப்பதால் பூச்சி முருகன் என்றானாவர். ஆம் .ஆரம்பத்தில் ஆள் பார்க்க குள்ளமாக இருப்பதை வைத்து, 'பூச்சி' என்றார்களாம் சிலர். பின்னர் இவர் சகல கட்சிகளிலும் ஊடுருவி பலரின் போக்குகளை கண்டறிந்து கலைஞருக்கு விளக்கியதால் கலைஞரே 'எங்கேய்யா பூச்சி' என்றதாலும் அவர் பேர் பூச்சி முருகன் ஆகிவிட்டதாக தகவல்.

இவர் மனைவி வழக்கறிஞர் என்பதால் ஆலோசித்து சரியான/ சட்டபடியான பாதையிலேயே பயணிப்பதால் இவருக்கு எல்லா தரப்பிலும் நெருங்கிய தொடர்புண்டு. இவர் கைக் காட்டினால் கோடி கணக்கில் ஃபைனான்ஸ் செய்ய பலர் தயாராக இருப்பதால் கோலிவுட்டில் இவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.

தந்தை சிவசூரியன், 'மந்திரிகுமாரி' படத்தில் பேசிய, ''பீம்சிங் இது என்ன புதுக்குழப்பம்?'' என்ற வசனம் அந்தக் காலத்தில் பிரபலம் என்பதும் 'சர்வாதிகாரி', 'தூக்குதூக்கி' உட்பட 150 படங்களில் நடித்தவ சிவசூரியன் மகனிவர் என்பதாலேயே இன்றைக்கும் தமிழ் நாடகக் கலையை காப்பாற்ற யூ-டியூப் மூலம் வாய்ப்புகள் வழங்கலாம் என யோசனை தெரிவித்து அதை அரசு மூலமே செயல்படுத்த முயன்று வருபவரிவர்.

இன்றைக்கும் பூச்சியாருக்கு போன் போட்டால், "எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்.. வாழ்வு வந்தால் அனைவரயும் வாழ வைப்போமே…" என்ற பாடல் ஒலிக்கும்..ஆம்.. எந்த ஒரு பதவி & அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் கூட கஷ்டமென்றால் நேரில் ஓடோடி வந்து உதவிடும் மனசுக் கொண்ட பூச்சியண்ணன்-னுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!