ரயில் பெட்டிகளில் கேட்பாரற்று கிடந்த 9 பைகளில் வைக்கப்பட்டிருந்த 500 மதுப்பாட்டில்கள் பறிமுதல்

ரயில் பெட்டிகளில் கேட்பாரற்று கிடந்த 9 பைகளில் வைக்கப்பட்டிருந்த 500 மதுப்பாட்டில்கள் பறிமுதல்
X

ரயில் (மாதிரி படம்)

பெங்களூரில் இருந்து தூத்துக்குடி சென்ற பெங்களூர் எக்ஸ்பிரஸ் இரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திண்டுக்கல் ரயில்வே ஆய்வாளர் அருள்ஜெயபால் தலைமையிலான போலீசார் ரயில் பெட்டிகளில் சோதனை செய்தனர்.

அப்போது 4 ரயில் பெட்டிகளில் கேட்பாரற்று கிடந்த 9 பைகளில் வைக்கப்பட்டிருந்த 500 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் ரயில்வே போலீசார்சார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Next Story