தென்காசி மாவட்டத்தில் சுயமாக மது தயாரித்த ஒருவர் மூலப்பொருள் பதுக்கிய 3 பேர் கைது. ஒருவர் தலைமறைவானார்.

தென்காசி மாவட்டத்தில் சுயமாக மது தயாரித்த ஒருவர் மூலப்பொருள் பதுக்கிய 3 பேர் கைது. ஒருவர் தலைமறைவானார்.
X

தென்காசி மாவட்டத்தில் சுயமாக மது தயாரித்த ஒருவர் மூலப்பொருள் பதுக்கிய 3 பேர் கைது. ஒருவர் தலைமறைவானார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் டாஸ்மாக் உட்பட அடைக்கப்பட்டுள்ளது.தடைசெய்யப்பட்டுள்ள நாட்களில் போலி மது விற்பனை நெல்லை தென்காசி உட்பட தமிழகமெங்கும் போலி மது விற்பனை நடைபெறுகிறது என பல்வேறு புகார்கள் காவல்நிலைத்தில் குவிந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லுர் பகுதியில் சந்திரன் என்பவர் பெண்கள் யூடியூப் வீடியோ பார்த்து சமைப்பது போல இவரும் படம் பார்த்து சாராயம் காய்ச்ச முயன்றுள்ளார். பயிற்சியின் நாற்றம் பக்கத்து வீட்டுக்கு போக அவரோ காவல்நிலைத்திற்கு தகவல் அளித்துள்ளார். அவர் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சந்திரனை கைது செய்து குக்கரை பறிமுதல் செய்தனர்.இவருக்கு உதவிய கனிஎன்பவர் தலை மறைவானார்.

சாராயம் காய்ச்ச தேவையான மூலப்பொருள் எப்படி கிடைக்கிறது என்ற கோணத்தில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினருக்கு அதே பகுதிக்கு அருகே உள்ள கடையாலுருட்டி பகுதியில் மயில் ராஜ் என்பது தோப்பில் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான எரிசாராயம் புதைத்து வைக்கபட்டுள்ளது என்கிற தகவல் கிடைத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தோட்டத்தில் புதைத்த வைக்கப்பட்டிருந்த 70 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்து மயில்ராஜ்,சாமி சங்கர்,ஈஸ்வரன்ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!