ஜூன் 6 வரை வங்கி வேலை நேரம் குறைப்பு-தமிழ்நாடு வங்கியாளா்கள் குழுமம் தகவல்
வங்கி வேலை நேரம் குறைப்பு - தமிழ்நாடு வங்கியாளா்கள் குழுமம்
தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி வேலை நேரம் ஜூன் 6-ஆம் தேதி வரை குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முழு பொதுமுடக்கத்தை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும், ஜூன் 6-ஆம் தேதி வரை குறைத்து, தமிழ்நாடு வங்கியாளா்கள் குழுமம் அறிவித்துள்ளது.
இதன்படி, வங்கிக் கிளைகளின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கி பரிவா்த்தனை நேரம் ஏற்கெனவே அறிவித்தது போல, பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.மண்டல அலுவலகங்கள், நிா்வாக அலுவலகங்கள் வழக்கம் போல, மாலை 5 மணி வரை செயல்படும்.கிளைகளில், மூன்றில் ஒரு பங்கு ஊழியா்கள், மாற்று முறையில் செயல்பட வேண்டும்.ரொக்க பரிவா்த்தனை, என்.இ.எப்.டி., ஆா்.டி.ஜி.எஸ். வாயிலாக பணம் அனுப்புதல், அரசு வா்த்தகம், காசோலை பரிவா்த்தனை சேவைகளை வழங்க வேண்டும்.
இஏ.டி.எம்., ரொக்கம் செலுத்தும் இயந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கிக் கிளைகள் உறுதி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu