கோவில்பட்டியில் காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முட்டை,குடிநீர்பாட்டில் வழங்கும் பொறியியல் பட்டதாரி.
பொறியியல் பட்டதாரி விக்னேஷ்
கோவில்பட்டியில் காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முட்டை மற்றும் குடிநீர் பாட்டில்களை பொறியியல் பட்டதாரி விக்னேஷ் வழங்கி வருகிறார்.
கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் பல திட்டங்கள், சலுகைகள், நிவாரண உதவிகள் அறிவித்தாலும் அவைத போதுமா என்றால் கேள்விக்குறிதான்.
பல இயற்கைப் பேரிடர்களின்போதும் இதுபோல வாழ்வாதார சிக்கல் தலைவிரித்தாடியது. அப்போது, அரசு மட்டுமின்றி பல தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி மக்கள் துயர் துடைத்தனர். கொரோனா காலத்திலும் இப்படியான தன்னார்வலர்கள் பலர் மக்களுக்கு உதவ முன்வந்தது செம்மையாக செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மந்தித்தோப்பு சாலையில் முட்டை மொத்த வியாபாரம் செய்துவரும் பொறியியல் பட்டதாரி இளைஞரான விக்னேஷ் என்பவர் கொரோனா காலத்தில் தன்னுடைய பங்களிப்பு ஏதாவது ஒன்று இருக்கவேண்டும் என்று யோசித்த நேரத்தில், இந்த இக்கட்டான கால சூழ்நிலையில் 24 மணிநேரமும் பணி மக்களுக்காக பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு தினங்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு முட்டை மற்றும் குடிநீர் பாட்டில் வழங்க முடிவு செய்து கோவில்பட்டி நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவலர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் விக்னேஷ் மற்றும் அவரது தந்தை இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில செயலாளர் தமிழரசன் இருவரும் முட்டை மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கினர்.
மேலும் தொடர்ந்து முட்டையுடன் சுண்டல் வழங்கும் முயற்சி செய்து வருவதாக பொறியியல் பட்டதாரியான விக்னேஷ் தெரிவித்துள்ளார். இளைஞர் விக்னேஷின் முயற்சி பாராட்டுக்குரியது...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu