தமிழகத்திற்கு 34 ரயில்கள் மூலம் 2267.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழகத்திற்கு 34 ரயில்கள் மூலம் 2267.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
X

தமிழகத்திற்குஇதுவரை 34 சிறப்பு ரயில்கள் மூலம் 2267.82 மெட்ரிக் டன் ஆக்சிசன் கொண்டு வரப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரவிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது, தெற்கு ரயில்வே தமிழகத்திற்கு இதுவரை 34 சிறப்பு ரயில்கள் மூலம் 2267.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தருவித்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் தமிழகத்திற்கான 30, 31ஆவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் என இரண்டு ரயில்கள் சட்டீஸ்கர் மாநிலம் பிலாயில் இருந்து 4 கண்டெய்னர்களில் 73.17 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனும், மஹாராஷ்டிரா மாநிலம் டோல்வி ஜிண்டால் தொழிலகத்தில் இருந்து நான்கு கண்டெய்னர்களில் 80.44 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனும் சென்னைக்கு தருவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை ரயில்வே பெட்டக நிலையத்தில் 22 ஆக்சிசன் ரயில்கள் கையாளப்பட்டு 1432.39 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் தமிழகம் வந்து சேர்ந்துள்ளது. அதேபோல கோயம்புத்தூர் மதுக்கரையில் 3 ஆக்சிஜன் விரைவு ரயில்கள் கையாளப்பட்டு 138.06 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாடிப்பட்டி, தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையங்களில் தலா ஒரு ஆக்சிஜன் விரைவு ரயில் கையாளப்பட்டு அந்தப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு 158.13 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது.மேலும் மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் 2 ஆக்ஸிஜன் விரைவு ரயில்கள் கையாளப்பட்டு 97.14 மெட்ரிக் டன் ஆக்சிசன் மதுரை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே 313 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி அதன்மூலம் 1274 டேங்கர்களில் 21392 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.

Next Story
நைட் 7 மணிக்கு மேல டீ குடிக்க கூடாதாமா?..அப்படி குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வரும்!..டீ பிரியர்களே உஷார்..!