தென்காசி மாவட்டத்தில் மதுபான கடையில் கொள்ளை முயற்சி்.

தென்காசி மாவட்டத்தில் மதுபான கடையில் கொள்ளை முயற்சி்.
X

ஜன்னலை உடைத்து அரசு மதுபான கடையில் கொள்ளை முயற்சி. உரிய நேரத்தில் காவலாளி விழித்து கொண்டதால் திருடர்கள் தப்பியோடி விட்டனர்.

தென்காசி மாவட்டம் சாலடியூர் அரசு மதுபான கடையில் ஏதோ உடைப்பது போல சத்தம் கேட்டு காவலாளி அந்த பகுதிக்கு விரைந்துள்ளார். அதற்குள் திருடர்கள் ஆள் அரவம் கேட்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து மதுபான கடையின் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரியான நேரத்தில் காவலாளி முழித்துக் கொண்டதால் பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் தப்பியது

Next Story
business ai microsoft