ஆந்திர மது தமிழகத்தில் விற்பனை- தமிழக கள்ளச்சாராய வியாபாரிகளை ஆந்திரா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆந்திர மது தமிழகத்தில் விற்பனை செய்த தமிழக கள்ளச்சாராய வியாபாரிகளை ஆந்திரா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொரோனோ நோய் தொற்று காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தி வருகிறது. இந் நிலையில் மது பிரியர்களின் ஆவலை மட்டும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கிருந்தாலும் தேடி சென்று குடித்துவிட வேண்டும் என்கின்ற அவர்களது மன ஆர்வத்தை நிறைவேற்ற கள்ளச்சாராய வியாபாரிகள் புற்றீசல் போல் அங்கு புதிதாக முளைக்க தொடங்கிவிட்டனர்.
சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், துணை கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் உத்தரவின் அடிப்படையில் ஆய்வாளர் லஷ்மிகாந் மேற்பார்வையில் குடிபாலா எஸ்.ஐ பிரசாத் தலைமையிலான போலீசார் மது கடத்தல் காரர்களை பிடிக்க வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் சாராய வியாபாரிகளான புகழேந்தி மற்றும் சிவகுமார், காட்பாடியை சேர்ந்த லட்சுமணன் ஆகியோரை ஆந்திர போலீசார் பாட்டிலும் கையுமாக பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.
சித்தூர் அருகே குடிபாலா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தபள்ளி அருகே ஆந்திர மாநில மதுபாட்டில்களை மூன்று இருசக்கர வாகனங்களில் எடுத்துக் கொண்டு வந்த இவர்களை சீலாபள்ளி அருகே கம்மதிம்மாபள்ளி என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவர்களிடம் மதுபாட்டில்கள் மற்றும். கள்ளச்சாரய பாக்கெட்டுகள் இருப்பதாக கண்டறிந்து அவர்களை பிடிக்க முற்பட்டபோது அங்கிருந்து வேகமாக தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் விரட்டிச் சென்று ஒரு வயல்வெளியில் மடக்கிப் பிடித்துள்ளனர்.
அவர்கள் வாகனத்தில் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றிய குடிபாலா காவல் நிலைய போலீசார் அவர்கள் பாட்டில்கள் கடத்த பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றி பின்னர் சித்தூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu