இரை தேடிச்சென்ற யானை பாறையில் வழுக்கி பரிதாபமாக இறந்தது..வனத்துறையினர் விசாரணை.
இரை தேடிச்சென்ற யானை பாறையில் வழுக்கி பரிதாபமாக இறந்தது..வனத்துறையினர் விசாரணை.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான புளியரை வனப்பகுதி தமிழக கேரள மாநில எல்லைப் பகுதியாக இருந்து வருகின்றது.மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்அடிவாரப் பகுதியில் ஏராளமான தனியார் தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
கேரளாவில் இருந்து ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் யானைகள் இரை தேடி கூட்டம் கூட்டமாக தமிழக வனப்பகுதிகளில் "ஆக்கிரமிப்பில்" உள்ள தனியார் தோட்டங்களில் புகுந்து மரங்களை சேதப்படுத்தும்.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான புளியரை வனப்பகுதிக்கு இரைதேடி நீர் குடிக்க வந்த யானை ஒன்று மலைப் பாறையிலிருந்து வழுக்கி விழுந்து இறந்துகிடந்துள்ளது.
இது குறித்து அந்த பகுதி தனியார் தோட்ட உரிமையாளர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து செங்கோட்டை மற்றும் புளியரை வனத்துறையினர் விரைந்து சென்று ஆய்வு செய்த பொழுது அது பத்து வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்துள்ளது,
இதனையடுத்து இன்று யானையை கால்நடைத்துறை மருத்துவர்கள் தலைமையில் உடற்கூறு பரிசோதனை செய்து அந்த வனப்பகுதியில் ஜேசிபி வாகனம் கொண்டுவரப்பட்டு அரசு முறைப்படி அடக்கம் செய்யப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu