தென்காசி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்பி ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்பி ஆய்வு மேற்கொண்டார்.
X

கொரோனா தடுப்பு பணிகளை தென்காசி எம்பி தனுஷ் குமார் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரைப்படி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்கள் பராமரிக்கும் மையத்தை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் மற்றும் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரகரணங்கள் குறித்து கேட்டறிந்தனர்.தொடர்ந்து அரியப்பபுரம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி மையத்தை துவக்கி வைத்து திப்பணம்பட்டி ஊராட்சியில் கொரோனா சம்பந்தமான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு செட்டியூர் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி மையத்தை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீன் இதுவரை இளைஞரணி துணை அமைப்பாளர் மாரியப்பன் ஆவுடையானூர் ஜான் ஜெயபாலன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story
மட்டன் சாப்டும்போது இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்டாதீங்க.. உயிருக்கே ஆபத்தாகலாம்..!