கன்னியாகுமரியில் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5,000 நிவாரணம்.

கன்னியாகுமரியில் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5,000 நிவாரணம்.
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், பகுதியாக சேதமடையத கூரை வீடு ஒன்றுக்கு ரூ.4100/- வீதமும், முழுமையாக சேதமடைந்த கூரை வீடு ஒன்றுக்கு ரூ.5000/- வீதமும் வழங்கப்படும்.

மானாவரி மற்றும் நீர்ப்பாசனம் பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும், மானாவரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும், பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

Next Story
ai solutions for small business