சங்கரன்கோவில் காவல்துறை சார்பில் மருந்து கடை உரிமையாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

சங்கரன்கோவில் காவல்துறை சார்பில் மருந்து கடை உரிமையாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
X

சங்கரன்கோவில் காவல்துறை சார்பில் மருந்து கடை உரிமையாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு வரும்7 ம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கு நீட்டித்துள்ள நிலையில் மருந்து மாத்திரைகள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல் துறையினருடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நகர காவல் ஆய்வாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து மாத்திரைகள் வழங்க கூடாது போதை உண்டாக்கும் மாத்திரைகளை விற்ப்பனை செய்ய கூடாது, மேலும் அரசின் அறிவுரை படி சமூக இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதல், உள்ளிட்ட விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது. கூட்டத்தில் 20க்கும் மேற்ப்பட்ட மருந்து கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
கேன்சர் இருக்கவங்க கண்டிப்பா இத சாப்டுங்க!..அவ்ளோ நன்மைகள் இருக்கு இந்த கோவக்காய்ல..