மதுரை வாடிப்பட்டியில் முதன் முறையாக கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது

மதுரை வாடிப்பட்டியில் முதன் முறையாக கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது
X

மதுரை வாடிப்பட்டியில் கொப்பரை தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது

தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் மதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகின்றது.முழு ஊரடங்கு அமலில் இருந்த போதும், அரசு வழிகாட்டுதலை பின்பற்றி தனிமனித இடைவெளியுடன் பாதுகாப்பான முறையில் ஏலம் நடைபெற்றது. இன்றைய ஏலத்தில் 7 விவசாயிகளின் 460594 தேங்காய்கள் 17 குவியலா மதுரை விற்பனைக் குழுவின் செயலாளர் மெர்சி ஜெயராணிதலைமையில் ஏலம் விடப்பட்டது.

ஏலத்தில் 12 வியாபாரிகள் பங்கு பெற்றனர்.அதிகபட்சமாக விலையாக ரூ 14.09 க்கும் குறைந்த பட்சமாக ரூ 9.21 க்கும் சராசரியாக ரூ 10.55 க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மேலும், ரூபாய் 4.60 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது.மேலும் , முதன் முறையாக ஒரு விவசாயின் 50.680 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில் மூன்று வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக 110 ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. கொப்பரையை மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிக விலைக்கு விற்று தரப்பட்டது.


Next Story
கேன்சர் இருக்கவங்க கண்டிப்பா இத சாப்டுங்க!..அவ்ளோ நன்மைகள் இருக்கு இந்த கோவக்காய்ல..