/* */

கேரள ஓ.என்.வி. அகாடமி வழங்கிய இலக்கிய விருதை திருப்பி தருகிறேன் - வைரமுத்து. வாங்காத விருதை எப்படி திரும்ப தரமுடியும் - மீம்ஸ்

கேரள ஓ.என்.வி. அகாடமி வழங்கிய இலக்கிய விருதை திருப்பி தருகிறேன் - வைரமுத்து.   வாங்காத விருதை எப்படி திரும்ப தரமுடியும் - மீம்ஸ்
X

ஓ.என்.வி இலக்கிய விருதை திருப்பித் தருகிறேன் பரிசுத்தொகையை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைவரையும் வழங்குகிறேன் கேரள மாநிலத்தின் பெருமை மிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு "வழங்கப்படுவதாக" ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது. நானும் நன்றி பாராட்டி வரவேற்றுன்.

ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்ட சில பேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குப்பையும் சிறுமைப் படுத்துவது ஆகுமோ என்று சிந்தனையழிகிறேன்.

அறிவார்ந்த நடுவர்களும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டு விடக்கூடாது என்றும் தவிக்கின்றேன். அதனால் சர்ச்சைகளுக்கு இடையே இந்த விருதை பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன் நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். அதை மிகுந்த தெளிவோடும், அன்போடும் அறிவிக்கின்றேன். ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கேஎ திருப்பி அளிக்கிறேன்

எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் மூன்று லட்சத்தை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.மற்றும் மலையாள மண் மீதும் மக்கள் மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்கு தொகையாக ரூபாய் இரண்டு லட்சத்தை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன்.

மற்றும் தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைலைக்கட்டும். இந்த விருது அறிவிப்பை கேட்டு ருள்ளத்தோடு என்னை வாழ்த்தி பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு உள்ளன்போடும் வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும் ஊடக உறவுகளுக்கும் என் நன்றி என தெரிவித்துள்ளார்.

Updated On: 29 May 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  2. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  3. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  5. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...
  6. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  7. வீடியோ
    இந்திய தேர்தலைக் காண வந்துள்ள உலகளாவிய பிரதிநிதிகள் குழு...
  8. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  9. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  10. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...