தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சம் மதிப்புள்ள நகை உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை :- 2 பேர் கைது.

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சம் மதிப்புள்ள நகை உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை :- 2 பேர் கைது.
X

ஆரோக்கிய செல்வசதீஷ் (எ) சூப்பி மற்றும் டேனியல்ராஜ் 

தூத்துக்குடியில் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து நகை, லேப்டாப் மற்றும் பணத்தை கொள்யைடித்த இருவரை கைது செய்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் நகை, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்தானகிருஷ்ணன் (46) என்பவர் தனது வீட்டை கடந்த ஏப்.30ம் தேதியன்று பூட்டி விட்டு ஊருக்கு சென்ற இவர், அதன்பிறகு மே.2ம் தேதி மீண்டும் விட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிற்குள் வைத்திருந்த 9 பவுன் எடையுள்ள ஆறு தங்க வளையல்கள், ஒரு லேப்டாப், வெள்ளி குங்குமச்சிமிழ், மொபைல் போன் மற்றும் பணம் ரூ. 3000/- திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சந்தானகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலிசார் தேடி வந்தனர். இதுகுறித்து தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, மாவட்ட ஒரு விரல் ரேகைப் பதிவுக்கூட உதவி ஆய்வாளர்கள் சம்பவ இடத்தில் உள்ள கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்ததில் தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் ஆரோக்கிய செல்வசதீஷ் (எ) சூப்பி (20) மற்றும் தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேரந்த ஜெயசீலன் மகன் டேனியல்ராஜ் (34) ஆகியோர் சந்தானகிருஷ்ணன் வீட்டை உடைத்து நகை, பணம் மற்றும் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆரோக்கிய செல்வசதீஷ் (எ) சூப்பி மற்றும் டேனியல்ராஜ் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் எடையுள்ள 6 தங்க வளையல்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வசதீஷ் (எ) சூப்பி இது போன்று பைக் திருட்டு உட்பட 8 திருட்டு வழக்குகளிலும், அதே போன்று டேனியல்ராஜ் என்பவர் கஞ்சா விற்பனை மற்றும் திருட்டு வழக்குகள் என 5 வழக்குகளிலும் சம்பந்தபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு