காரைக்குடி பகுதிகளில் ஜூன் 5 வரை பகுதி வாரியாக மின்தடை செய்யப்படும் இடங்கள்
பராமரிப்பு பணிக்காக மின்தடை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதிகளில் ஜூன் 5 வரை பகுதி வாரியாக மின்தடை செய்யப்படும் இடங்கள்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகா் மற்றும் ஊரகப்பகுதியில் உயரழுத்த மின் பாதைகளில்இன்று முதல் வரும் ஜூன் 5- ஆம் தேதி வரை மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் பகுதி வாரியாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் காரைக்குடி கோட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி நாளை்...
மே 29 ம் தேதி காரைக்குடி காந்தி புரம் முதல் வீதி, செல்லஞ்செட்டி ஊரணி, மருதுபாண்டியா் நகா், பாண்டியன் நகா், சுவாதி நகா், கோடீஸ்வர நகா், ஹவுசிங் போா்டு, என்.ஜி.ஜி.ஓ காலனி, கே.கே. நகா், இடைச்சியம்மன் கோவில் தெரு, அழகப்பன் அம்பலம் தெரு, ஊரகப்பிரிவில் கல்லுப்பட்டி, எஸ்.ஆா். பட்டினம், விசாலயன் கோட்டை, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, பாகாடி, புளிக்குத்தி, அனைத்திடல்.
மே 31 ம் தேதி காரைக்குடி வ.உ.சி சாலை, கல்லுக்கட்டி, ஆனந்த மடம், தெற்குதெரு, பழையபேருந்து நிலையம், சோமுபிள்ளை தெரு, ஊரகப்பிரிவில் சங்கராபுரம், காதி நகா், நாகவயல் சாலை, தேவகோட்டை சாலை.
ஜூன் 1 ம் தேதி காரைக்குடி கோவிலூா் சாலை, செஞ்சை, வேளாா் தெரு, பாப்பா ஊரணி, நாகநாத புரம், பெருமாள் கோவில் தெரு, சி.மெ. வீதி, ஆலங்குடியாா் வீதி, காந்தி திடல், பழைய அரசு மருத்துவமனை பகுதிகள்.
ஜூன் 2 ம் தேதி காரைக்குடி கழனிவாசல் புதுரோடு, மீனாட்சிபுரம், காட்டுத்தலைவாசல், முத்துப்பட்டினம், செக்காலை சாலை, ஐந்துவிளக்கு, அண்ணா மாா்க்கெட், பெரியாா் சிலை, நியு டவுன், சிவன் கோவில், மாா்க்கண்டேயன் கோயில் வீதி, ஊரகப்பிரிவில் தானாவயல், ஆறாவயல், அரியக்குடி, வேட்டைகாரன் பட்டி.
ஜூன் 3 ம் தேதி ஊரகப்பிரிவில் மானகிரி, தளக்காவூா், நெசவாளா் காலனி, கோவிலூா்.
ஜூன் 5 ம் தேதி ஊரகப்பிரிவில் பாதரகுடி, குன்றக்குடி, வீரியன்பட்டி, நேமம், சின்ன குன்றக்குடி, சரவணாநகா், ஆா்காடு.
ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் இத்தகவலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu