/* */

தென்மேற்கு பருவமழை வருகிற 31-ந் தேதியே தொடங்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை வருகிற 31-ந் தேதியே தொடங்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
X

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 31ம் தேதி துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.அந்தமான் கடலில் ஏற்பட்ட மாற்றமும், அங்கிருந்து வீசும் காற்றின் தன்மையும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வழக்கமாக கேரளாவைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும்.தமிழகத்திற்கு தென்மேற்கு பருவ மழை காலத்தில்தான் அதிக அளவு மழை பொழிவு கிடைக்கும். ஜூன் மாதம் தொடங்கும் மழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

அந்தமான் கடல் பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றத்தை கணக்கிட்டும், அங்கிருந்து வீசும் காற்றின் தன்மையை கொண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை வானிலை ஆய்வு மையம் கணிக்கும்.

இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ந் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் இப்போது அந்தமான் கடலில் ஏற்பட்ட மாற்றமும், அங்கிருந்து வீசும் காற்றின் தன்மையும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி வருகிற 31-ந் தேதியே தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று கூறப்பட்டு உள்ளது.தென்மேற்கு பருவ மழை காலத்தில் குமரி மாவட்டத்திலும் நல்ல மழை பொழிவு இருக்கும்.இங்குள்ள அனைத்து அணைகளும் தென்மேற்கு பருவ மழை காலத்தில் நிரம்பி வழியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 May 2021 4:49 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...