பாம்பன் பகுதியில் வீசிய சூறைக்காற்று காரணமாக ஒரு படகு கடலில் மூழ்கியது படகுகளை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் திவிரம்.
பாம்பன் பகுதியில் நேற்று நள்ளிரவு வீசிய சூறைக்காற்று காரணமாக ஒரு படகு கடலில் மூழ்கியது 7 படகுகள் தரை தட்டி கரை ஒதுங்கின படகுகளை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் திவிரம்.
ராமேஸ்வரம் தீவு பகுதியில் நேற்று மாலை சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டது.
இந்நிலையில் பாலம் பகுதியில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எமர்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நங்கூரம் அறுந்து பாம்பன் தூக்கு பாலத்தில் மோதி படகு சேதம் அடைந்ததுடன் பாலத்தின் அருகே இருந்த புதிய பாலம் அமைக்கும் பணிக்காக நிறுத்தி இருந்த பார்ஜெர் மீது மோதி படகு கடலில் மூழ்கியது.
அதேபோல் கிளமெண்ட் என்பவருக்கூ சொந்தமான படகின் நங்கூரம் அறுந்து பாம்பன் பாலம் அருகே தரை தட்டி நின்றது தற்பொழுது அந்த படகை மீட்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்., அதேபோல் சின்னபாலம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆறு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் தரை தட்டி உள்ளதால் அந்த படகுகளை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல இராமேஸ்வரம் சங்குமால் கடற்கரை மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை 100 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்ளவங்கியுள்ளது, இதனால் நாட்டு படகுகள் தரை தட்டி காணப்படுகிறது, அதே போலே அக்னி தீர்த்த கடலின் உள்ள பாறைகள் பாவலப்பறைகள் பாசிகள் தண்ணீர் இன்றி தெளிவாக காணப்படுகிறது. மேலும் இராமேஸ்வரம் தீவு பகுதி பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாந்தது,
பலத்த காற்றின் வேகம் காரணமாக சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த ராமேஸ்வரம் விரைவு ரயில் மண்டபத்தில் நிறுத்தபட்டுள்ளது,அதே போல இராமேஸ்வரத்தில் இருந்து கிளம்ப வேண்டிய சென்னை விரைவு ரயில் இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் மண்டபத்தில் இருந்து புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu