கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதால் பேயன்குழியில் நுாற்றாண்டுகள் பழமையான ஆலமரம் சாலையில் சாய்ந்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இடைவிடாது பெய்த கனமழையால் பல பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பள்ளி வளாக மதில் சுவர்கள்,நிழல்குடைகள் இடிந்து விழுந்தது.மேலும் பலத்த காற்று வீசியதால் பேயன்குழியில் நுாற்றாண்டுகள் பழமையான ஆலமரம் சாலையில் சாய்ந்தது.
மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக தயார் செய்யப்பட்ட நாற்றங்கால்கள், தோட்டப்பயிர்கள் நீரில் மழைநீரில் மூழ்கின. ஏராளமான வாழைகள் நாசமாகின.புத்தேரி பெரிய குளம் நிறைந்து உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது- மேலும் விளை நிலைங்களில் முற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகளில் உள்ள குளங்கள் நிறைந்து உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது.மேலும் நாகர்கோவில்,புத்தேரி அரும நல்லூர், அஞ்சுகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் 6500 ஹெக்டேர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் வீடுகள் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மேசமான நிலையில் உள்ள 25 % சதவீத வீடுகள் மழைக்கு தாக்குபிடிக்கமால் இடிந்துள்ளது.மேலும் எந்த பகுதிகளுக்கு சென்றாலும் குமரிமாவட்டம் தண்ணீர் காடாக மாறியுள்ளது.
அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்குமாறும் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.அதே போல் போல் விவசாயிகள் கடந்த வாரத்தில் நாத்து நடவு செய்த கன்னிப்பூ நெற்பயிர்கள் மழை நீரில் முழ்கியுள்ளது.மேலும் தொடர் மழை பொழிந்தால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu