குமரியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் நேரடி ஆய்வு.

குமரியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் நேரடி ஆய்வு.
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே பாதிப்புகள் அதிகம் கண்டறியப்பட்ட தெருக்கள் மற்றும் பகுதிகளை கட்டுப்படுத்தபட்ட பகுதிகளாக அறிவித்து உள்ள மாவட்ட நிர்வாகம் அங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் அங்கு தடுப்பு வேலிகள் அமைத்து பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கட்டுப்படுத்த பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்களிடம் அத்தியாவசிய பொருட்கள், உதவிகள் கிடைக்கிறதா என்பதை கேட்டு தெரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story
வாரம் 2 முறை.. வயிற்றை சுத்தம் செய்ய இந்த இலைய சாப்டுங்க!..