கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டத்தையே புரட்டி போடும் அளவிற்கு சூறை காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டத்தையே புரட்டி போடும் அளவிற்கு சூறை காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
X

கன்னியாகுமரி மழை

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டத்தையே புரட்டி போடும் அளவிற்கு சூறை காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்த்து.

நாகர்கோவில், சுசீந்திரம், தக்கலை, மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் ஆற்று வெள்ளம் போல் ஓடியது.

இதே போன்று மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை நீடித்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது, மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது.

Next Story
ai solutions for small business