அரியலூர் தொகுதியில் சின்னப்பா வெற்றி

அரியலூர் தொகுதியில் சின்னப்பா வெற்றி
X

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் சின்னப்பா வெற்றப் பெற்றார்.முதல் சுற்றிலேயே மதிமுக வேட்பாளர் சின்னப்பா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனை காட்டிலும் 1,041 வாக்குகள் முன்னிலை பெற்றார். 2 ஆவது சுற்றில் 1,547 வாக்குகளும், 3 ஆவது சுற்றில் 1,789 வாக்குகளும் முன்னிலை பெற்றார்.

தொடக்க முதலில் இருந்து முன்னிலை பெற்று வந்த சின்னப்பா, 27வது சுற்றான இறுதிச் சுற்றில் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனை விட 3,234 வாக்குள் அதிகம் பெற்று முதல் முறையாக அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

Next Story