மல்லிகைப்பூ உற்பத்தியை அதிகரிக்க மதுரையில் ரூ.7 கோடியில் புதிய இயக்கம்
மல்லிகைப்பூ - கோப்புப்படம்
2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
மதுரை மல்லிகைப்பூ உற்பத்தியை அதிகரிக்க ரூ.7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும். மல்லிகைக்கு புகழ்பெற்ற மதுரையை மையமாக வைத்து ஒரு தொகுப்பு ஏற்படுத்தப்படும். மல்லிகை மதுரையில் மட்டுமின்றி விருதுநகர் திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய இடங்களில் 4,300 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இத்தொகுப்பில் மல்லிகை உற்பத்தியை மேம்படுத்துவதோடு, சந்தை வாய்ப்புகளும் மேம்படுத்தப்படும். குறிப்பாக பருவமில்லா காலங்களில் உற்பத்தியை உறுதி செய்யப்படும்.
தொடர் திட்டமாக ஐந்து ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு தேவையான தரமான மல்லிகை செடிகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து உரிய காலத்தில் வழங்கிட வகை செய்யப்படும் மல்லிகை சாகுபடிகள் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நடவு செய்யவும் பயிர் பாதுகாப்பு மேலாண்மை மேற்கொள்ளவும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதற்காக ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும்.
வரும் ஆண்டில் இத்திட்டம் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu