புதிய ரேஷன் அட்டைதாரர்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்
புதிய ரேஷன் அட்டைதாரர்கள்...
புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குடிமக்களின் முக்கிய ஆதாராமாக பயன்படும் ரேஷன் கார்டுகள் ஒவ்வொரு குடும்பத்திற்கு அவசியமான ஒன்றாக உள்ளது. இதில் நாள்தோறும் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். அனைவருக்கும் விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த செயல்முறையும் தொடர்ந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி தமிழகத்தில் புதிய ஸ்மார்ட் கார்டுளுக்காக இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவற்றில் 3 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன .
மேலும் மற்ற விண்ணப்பங்களுக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் அறிவுறுத்தல்களின் படி 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி புதிய ரேஷன் அட்டைதாரர்கள் இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu