ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள்
தலைமை செயலகம்
ஆதிதிராவிடர் நல அமைச்சர் 08.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில் இத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:
"ஆதிதிராவிட மாணாக்கரின் உயர் கல்விக்கான வாய்ப்புகளை பெருக்கிடும் வகையிலும், அவர்கள் பாதுகாப்பாக தங்கி கல்வி பயிலும் வகையிலும், வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சேலம் மாவட்டம், மரவனேரி ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்."
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆதிதிராவிட மாணாக்கரின் உயர் கல்விக்கான வாய்ப்புகளை பெருக்கிடும் வகையிலும், அவர்கள் பாதுகாப்பாக தங்கி கல்வி பயிலும் வகையிலும், வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சேலம் மாவட்டம், மரவனேரி ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் ரூ.10,75,00,000/- (ரூபாய் பத்து கோடியே எழுபத்தைந்து இலட்சம் மட்டும்) மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் மூலம் பணிகளை மேற்கொள்ள, நிர்வாக அனுமதி அளித்தும் நிதி ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu