/* */

நெல்லை -திருச்செந்தூர் ரயில் பயண நேரம் குறைப்பு: புதிய கால அட்டவணை வெளியீடு

Namakkal To Tiruchendur Train -நெல்லை -திருச்செந்தூர் ரயில் பயண நேரம் குறைக்கப்பட்டு புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

நெல்லை -திருச்செந்தூர் ரயில் பயண நேரம் குறைப்பு: புதிய கால அட்டவணை வெளியீடு
X

நெல்லை- திருச்செந்தூர் இடையே ரயில் பயண நேரம் குறைக்கப்பட்டு புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

நெல்லை -திருச்செந்தூர் ரயில் சேவை

Namakkal To Tiruchendur Train -திருச்செந்தூர்-நெல்லை இடையே 61 கிலோ மீட்டர் தூரம் ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்களை இயக்கும் வகையில் பலப்படுத்தப்பட்டது. கடந்த 15-ந்தேதி இந்த பாதையில் அதிவேக ரெயில் இயக்கி அதற்கான சோதனையும் நடத்தப்பட்டது. மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் பாதை மின்மயமாக்கல் (எலக்ட்ரிபிகேசன்) செய்யப்பட்டு மின்சார என்ஜின் மூலம் ரெயில்களை இயக்குவதற்கும் தயார் செய்யப்பட்டது. அதற்கான சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் இந்த வழித்தடத்தில் ரெயில்கள் பழைய முறைப்படி டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வருவதுடன், வேகமும் அதிகரிக்கப்படாமல் இருந்து வந்தது.

பயண நேரம் குறைப்பு

திருச்செந்தூர்-நெல்லை இடையே இயக்கப்படும் ரெயில்களின் நேரம் ஏப்ரல் 1-ந்தேதி (சனிக்கிழமை) முதல் மாற்றப்பட்டு உள்ளது. இதில் சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்டு வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பயண நேரம் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையில் இருந்து வழக்கம் போல் மாலை 4.05 மணிக்கு புறப்படுகிறது. அங்கிருந்து நெல்லை சந்திப்புக்கு வழக்கம் போல் அதிகாலை 4.55 மணிக்கு வந்து விடும்.

மின்சார ரயில்

இதுரைவ நெல்லையில் மின்சார என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜின் மாற்ற வேண்டி இருந்ததால் காலை 6 மணிக்குதான் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு காலை 8 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும்.

ஆனால் வருகிற 1-ந்தேதி முதல் நெல்லையில் டீசல் என்ஜின் மாற்ற தேவையில்லை. ஏனென்றால் இந்த ரெயில் இனிமேல் முழுமையாக சென்னை முதல் திருச்செந்தூர் வரை மின்சார என்ஜின் மூலம் இழுத்து செல்லப்படுகிறது.

அதனால் நெல்லைக்கு காலை 4.55 மணிக்கு வந்தவுடன் மீண்டும் 5 மணிக்கு திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு செல்கிறது. திருச்செந்தூருக்கு 6.50 மணிக்கு சென்றடைவதாக கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 1 மணி 10 நிமிடங்கள் பயண நேரம் குறைகிறது. அதே நேரத்தில் இந்த ரெயில் காலை 5.59 மணிக்கு காயல்பட்டினம் சென்று விடுவதாக அட்டவணையில் குறிப்பிடப்பட்டு உள்ளதால், திருச்செந்தூருக்கு குறிப்பிட்ட 6.50 மணிக்கு முன்னதாகவே இந்த ரெயில் சென்றடையும் என்று தெரிகிறது.

இது தவிர நெல்லை திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்டு மற்ற சிறப்பு பாசஞ்சர் ரெயில்கள் புறப்படும் மற்றும் வருகை நேரமும் மாற்றி மைக்கப்பட்டு உள்ளது.

பாசஞ்சர் ரயில்கள்

இதன்படி பாலக்காடு-திருச்செந்தூர் பாசஞ்சர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த ரெயில் நெல்லை சந்திப்புக்கு பிற்பகல் 1.45 மணிக்கு வந்து திருச்செந்தூரை 3.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு பதிலாக 12.20 மணிக்கு புறப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கம் போல் நெல்லைக்கு 1.25 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் வழக்கமான கால அட்டவணையில் பாலக்காட்டுக்கு புறப்பட்டு செல்கிறது. இதேபோல் திருச்செந்தூர்-நெல்லை இடையே இயக்கப்படும் பாசஞ்சர் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரங்களும் 5 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

புதிய கால அட்டவணை

பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய கால அட்டவணை கீழே தரப்பட்டு உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 March 2024 5:49 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்