சிறந்த நீர்மேலாண்மை: தேசிய விருது வென்று வெள்ளப்புத்தூர் ஊராட்சி சாதனை

சிறந்த நீர்மேலாண்மை: தேசிய விருது வென்று வெள்ளப்புத்தூர் ஊராட்சி சாதனை
X

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோரை, வெள்ளப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வரதன், துணை தலைவர் ப.விஜயகுமார், ஊராட்சி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சிறந்த நீர் மேலாண்மைக்காக, அச்சிறுபாக்கம் ஒன்றியம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி, தேசிய விருதை பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளபுத்தூர் ஊராட்சி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பாக, மூன்றாவது தேசிய நீர் மேலாண்மை விருதுகள் -2020 -ஐ பெற்றுள்ளது. இந்த விருதுக்கான பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம் பெற்றுள்ளது. அதில், தெற்கு மண்டலத்தில் செங்கல்பட்டு மாவட்டம், வெள்ளபுத்தூர் ஊராட்சி 2வது இடத்தில் தேர்வாகியுள்ளது.

தேசிய அளவில் விருதை வென்று தமிழகத்திற்கு வெள்ளபுத்தூர் ஊராட்சி பெருமை சேர்த்திருக்கிறது. அந்த ஊராட்சி நிர்வாகத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த சூழலில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோரை வெள்ளப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வரதன், துணை தலைவர் ப.விஜயகுமார், ஊராட்சி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் சந்தித்து இனிப்பு வழங்களை வழங்கி வாழ்த்து பெற்றனர். மேலும், மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு, ஊராட்சி சார்பாக நன்றியை தெரிவித்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil