கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு இரவில் ஓளிரூட்டும் மின் விளக்குகள்-அமைச்சர் தகவல்
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இரவில் ஓளிரூட்டும் மின் விளக்குகள் அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் தெரிவித்துள்ளார்
நாமக்கல் அரசு மருத்துவமனையில் புதிதாக பொறுப்பேற்ற செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா தலைமை தாங்கினார் இதில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் சுமார் 10க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் பின்பு மருத்துவமனையில் 10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினார் இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன்
கொல்லி மலையை மேம்படுத்த அடுத்துவரும் கலந்தாய்வில் முடிவெடுக்கப்படும்.தமிழகத்திலுள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த நேற்று சுற்றுலா துறை உயரதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.தற்போது 295 சுற்றுலா தளங்களை தேர்வு செய்து அதன் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு லேசர் ஒளி பொருத்தும் பணி விரைவில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த சுற்றுலா மையத்தில் மேம்படுத்தப்படும்
அதேபோன்று பூம்புகார் சுற்றுலா தலம் உள்கட்டமைப்பை மேம்படுத்தி அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் மற்றும் அதனுடைய வழித்தட வரைபடங்களை இணையவழியில் விரைவில் இணைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராசு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம் பொன்னுசாமி மற்றும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சோமசுந்தரம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சித்ரா உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu