நாமக்கல் மாவட்ட முன்னாள் கலெக்டர் மரணம்

நாமக்கல் மாவட்ட முன்னாள் கலெக்டர் மரணம்
X

நாமக்கல் மாவட்ட முன்னாள் கலெக்டர் சுந்தரமூர்த்தி

நாமக்கல் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சுந்தரமூர்த்தி அவர்கள் மரணமடைந்தார்

நாமக்கல், திருவள்ளூர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சுந்தரமூர்த்தி IAS இன்று காலை வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள அவரது தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இன்று வடக்குபட்டு கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கொய்யா செடிகள் மற்றும் கொய்யாமரங்களை சுந்தரமூர்த்தி பராமரிப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த ஒரு கொய்யா மரத்தில் மின்கம்பி உரசிக்கொண்டு இருந்தது. அதில் மின்கசிவும் ஏற்பட்டிருந்தது.

கொய்யாமரத்தை தொட்டபோது அதில் எற்கனவே ஈரம் இருந்ததால் கசிந்த மின்சாரம் சுந்தரமூர்த்தி மீது பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கீழ்த்தட்டு மக்களுக்கு, உதவி தேவைப்படும் தகுதி உள்ளோருக்கு, சிறு தடைகள் இருந்த போதும் சட்டத்தை சற்று வளைத்து தேவையான உதவிகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர். இநத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story