நூதன முறையில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

நூதன முறையில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நூதன முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு காவல்துறையினர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் காவல்துறை மற்றும் தென்னிந்திய திரைப்பட மேடை நடன கலைஞர்கள் இணைந்து நான்குவழிச்சாலை சந்திப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினர்.

இதில் திரைப்பட மேடை நடன கலைஞர்கள் எம்ஜிஆர்,ரஜினிகாந்த் மற்றும் எமதர்மன், சித்தரகுப்தர் ஆகிய வேடங்கள் அணிந்தபடி பொதுமக்கள் மத்தியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும் தத்ரூபமாக வெளிப்படுத்தினர். மேலும் கார்களில் செல்பவர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிவது குறித்தும் வாகன ஓட்டிகள் மத்தியில் துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.மேலும் காவல்துறை சார்பில் கலைஞர்கள் கெளரவிக்கபட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!