இந்து முன்னணியினர் திமுக அரசை கண்டித்து கோயிலில் விளக்கேற்றி நூதன போராட்டம்

இந்து முன்னணியினர் திமுக அரசை கண்டித்து கோயிலில்  விளக்கேற்றி நூதன போராட்டம்
X

விநாயகர்சதுர்த்தி விழாவுக்கான தடையை நீக்கக்கோரி வேதாரண்யத்தில் கோயிலில் இந்து முன்னணியினர் விளக்கேற்றி முறையிட்டனர்.

விநாயகர்சதுர்த்தி விழாவுக்கான தடையை நீக்கக்கோரி வேதாரண்யத்தில் கோயிலில் விளக்கேற்றி முறையிட்ட இந்து முன்னணியினர்

வேதாரண்யத்தில் இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்த திமுக அரசைக் கண்டித்து கோயிலில் விளக்கேற்றி முறையிட்டனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை.. ஆனால், சாராயக் கடைகளை திறந்திருக்கலாம். சினிமா தியேட்டர்களில் கூட்டம் கூடலாம். ஐம்பது பேர் பயணிக்கும் பேருந்தில் 75 பேர் பயணிக்கலாம். அரசு விழாக்கள் திமுக அரசு தெருவில் நடத்தலாம். பள்ளி, கல்லூரிகள் இயங்குவது சரி என்றால், விநாயகரை வீட்டில் வைத்து மட்டும் வழிபட அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயம். இனி வீட்டில் சமைப்பதற்கு கூட அரசின் அனுமதி பெறவேண்டுமா என திமுக அரசை இந்து முன்னணியினர் விமர்சனம் செய்தனர்.

இதனையடுத்து, நாகை மாவட்ட செயலாளர் வேதபிரசாத் தலைமையில் ஒன்றுகூடி, கீழ வீதியில் வேதாரண்யேஸ்வரர் கோயில் முன்புறம் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கோயிலுக்குள் சென்று விளக்கேற்றி சுவாமியிடம் முறையிட்டனர். இதில் ஏராளமான இந்து முன்னணியினர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். வேதாரண்யம் பகுதியில் விநாயகர் ஊர்வலம் கண்டிப்பாக நடைபெறும் என நாகை மாவட்ட செயலாளர் வேத பிரசாத் தெரிவித்தார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!