கடலுக்கு செல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வேதாரண்யம் மீனவர்கள்

கடலுக்கு செல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வேதாரண்யம்   மீனவர்கள்
X

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

‌வேதாரண்யம் சுற்றுவட்டார மீனவ கிராம மீனவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக கடலுக்கு செல்லவில்லை.

நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியில் ஆறுகாட்டுத்துறை வெள்ளப்பள்ளம் புஷ்பவனம் கோடியக்கரை வானவன் மகாதேவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் கொரானா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுவதால் இன்று ஒரு நாள் மட்டும் வேதாரண்யம் பகுதி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ தொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

தடுப்பூசி செலுத்தும் முகாமை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தங்களின் நாட்டுப்படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!