சிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிகாரியை கைது செய்ய தயங்குகிறதா போலீஸ்?

சிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிகாரியை கைது செய்ய தயங்குகிறதா போலீஸ்?
X

சிவாஜி 

வேதாரண்யம் அருகே 12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மீது போக்சோவில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், போலீசார் இன்னமும் கைது செய்யாதது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு, 12 வயதில் மகள், 9 வயது மகன் உள்ளனர். நாகை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் குரவப்புலத்தை சேர்ந்த சாலை தர ஆய்வு அதிகாரி சிவாஜிராஜா என்கிற சிவாஜி, மேற்படி 12 சிறுமியை, அங்குள்ள கோவிலின் பின்புறம் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அதிர்ச்சி அடைந்த அவர்கள், வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த மாதம் 9 ஆம் தேதி புகார் அளித்தனர். புகாரை பெற்ற வேதாரண்யம் போலீசார், நெடுஞ்சாலை துறையில் பணிபுரியும் சிவாஜி ராஜா என்கிற சிவாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த 1 மாதங்கள் ஆகியும் போலீசார், இதுநாள் வரை அவரை கைது செய்யவில்லை. இதனிடையே, சிவாஜிராஜாவுக்கு நெருங்கிய உறவினர்கள் வழக்கை வாபஸ் வாங்க சொல்லி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், நாகை மாவட்ட ஆட்சியரிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியின் புகைப்படத்தை எடுத்து வந்து, புகார் அளித்தனர். மேலும், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, சிறுமியை புகைப்படம் எடுத்துவைத்து கொண்டு மிரட்டுவதாகவும், அரசு அதிகாரி என்பதால், போலீசார் கைது செய்ய தயங்குவதாகவும், குற்றம்சாட்டியுள்ள சிறுமியின் பெற்றோர், உடனடியாக அவரை கைது செய்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

போக்சோவில் வழக்கு பதிந்தும் இன்னமும் சிவாஜியை கைது செய்யாதது, பொதுமக்கள் மற்றும் ஊர்பிரமுகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
ai marketing future