வேதாரண்யம் அருகே வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா

வேதாரண்யம் அருகே வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா
X

வண்டுவாஞ்சேரி ஊராட்சி அலுவலகம் முன் துப்புரவு பணியாளர்கள் தர்ணா செய்தனர்.

வேதாரண்யம் அருகே வண்டுவாஞ்சேரி ஊராட்சி தலைவியின் கணவரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் கடந்த 5 முதல் 10 ஆண்டுகளாக துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மை காவலராக பத்து பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்பொழுது ஆட்சி மாறியவுடன் வண்டுவாஞ்சேரி தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வியின் கணவர் குமார் என்பவர் துப்புரவு பணியாளர்களை பணி செய்ய விடாமல் குப்பை அள்ளும் வண்டியை பூட்டுப் போட்டு பூட்டி உள்ளாராம்.

குப்பை அள்ளும் வண்டியை பூட்டு போட்டு போட்டு பூட்டியதால் கடந்த 5 முதல் 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் வேலை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். ஆகையால் கடந்த 2 தினங்களாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக துப்புரவு பணியாளர் சுப்பிரமணியன் என்பவர் கூறும்போது தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் தங்களை தரக்குறைவாக பேசுவதாகும், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!