தைமாத அமாவாசை:வேதாரண்யத்தில் கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
வேதாரண்யத்தில் தைமாத அமாவாசையை முன்னிட்டு கோடியக்கரை ஆதி சேது கடலில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து பொது மக்கள் வழிபட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தைமாத அமாவாசையை முன்னிட்டு கோடியக்கரை ஆதி சேது கடலில் பொது மக்கள் தங்களோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தைமாத அமாவாசையை முன்னிட்டு கோடியக்கரை ஆதி சேது கடலில் பொது மக்கள் தங்களோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு கடலில் குளித்து காதோலை கருகமணி எலுமிச்சைப் பழத்தை கடலில் வீசி புனித நீராடி கடற்கரையிலேயே அமர்ந்து ஓதுவார்கள் ஓதி வாழை இலையில் பச்சரிசி காய்கறிகள் வைத்து நிதி கொடுத்தனர்.
பின்னர் அங்கிருந்து சன்னதிக்கு எதிரே உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மணிகருணை தீர்த்தத்தில் நீராடி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணிகளை வேதாரண்யம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஊர்க்காவல் படையினர் மற்றும் கடலோர காவல்படை போலீசார் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வட கிழக்கு பருவமழையால் வேதாரண்யம் முதல் புஷ்பவனம் வரை கடல் சேர் தள்ளியதால் குறிப்பிட்ட அளவு மட்டுமே கடற்கரையில் நீராட அனுமதித்தனர்.அதை தாண்டி செல்லாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது, மீறி அதைத் தாண்டி செல்பவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu