இலை சின்னத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரிப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிகள் ஆன கரியாப்பட்டிணம், தென்னம்புலம், வடமழை, மணக்காடு, பிராந்தியங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சர் ஓ எஸ் மணியன் ஈடுபட்டு வருகிறார்.
செல்லும் இடமெங்கும் மக்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது, வழிநெடுகிலும் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் பொதுமக்கள் மரியாதை செய்து வருகின்றனர். அவர்களிடத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரிப்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத்திற்கு 6 சிலிண்டர் வழங்கப்படும், மாதத்திற்கு பெண்களுக்கான 1500 ரூபாய் தொகை வழங்கப்படும், முதியோர் உதவித் தொகையை உயர்த்தி வழங்கப்படும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிதொகை உயர்த்தி வழங்கப்படும் என பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி மக்களிடத்தில் ஓட்டுகளை சேகரித்து வருகிறார். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu