வேதாரண்யம் கத்தரிப்புலம் ஊராட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்

வேதாரண்யம் கத்தரிப்புலம் ஊராட்சி இடைத்தேர்தல் தொடர்பான  ஆலோசனை கூட்டம்
X

கத்தரிப்புலம் ஊராட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசினார்.

வேதாரண்யம் கத்தரிப்புலம் ஊராட்சி மன்ற இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்றார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த அபிமன்னன் இறந்ததை யொட்டி அங்கு வரும் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

கத்தரிப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அபி.வீரமணியை ஆதரித்து நாகை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன், மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையன், ஒன்றிய குழு தலைவர் கமலாஅன்பழகன், நகர செயலாளர் நமச்சிவாயம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய நகர கழக சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கழக நிர்வாகிகளுடன் ஓ .எஸ். மணியன் கலந்துரையாடினார்.

கத்தரிப்புலம் ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அபி. வீரமணியை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுமென அப்போது கேட்டுக்கொண்டார்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!