வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தில் மீன் பிடி இறங்கு தளத்திற்கு அடிக்கல்
வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கிராமத்தில் மீன் பிடி இறங்குதளத்திற்கு ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 33 லட்சம் மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது. முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ எஸ் மணியன் மீன் பிடி இறங்கு தளத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் அ.தி.மு.க..கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கிரிதரன் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பையன் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் ,மாவட்ட கவுன்சிலர் திலீபன், கவுன்சிலர் ஆர். கே. ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் நாடிமுத்து மற்றும் ஒன்றிய, நகர,கழக நிர்வாகிகள் மற்றும் புஷ்பவனம் மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.,
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu