முன்னாள் அமைச்சர் தாக்கியதாக நாகை அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி

முன்னாள் அமைச்சர் தாக்கியதாக நாகை அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி
X
தாக்கப்பட்டவருக்கு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கியதாக நாகை அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைஞாயிறு பேரூராட்சியில் ஓ.எஸ்.மணியனின் சொந்த வார்டான 13 வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அஜய் ராஜாவிற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியுள்ளர். மேலும் ஓ.எஸ்.மணியன் மற்றும் அ.தி.மு.க.வுக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜெகன் தலைஞாயிறு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன், தகராறில் ஈடுபட்டு ஜெகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெகன் தலைஞாயிறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ஜெகன் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைஞாயிறு பகுதியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டு இருப்பதால் அங்கு பரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags

Next Story
ai solutions for small business